இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் கொடுப்பது எப்போது என கேட்கும்போது அமைச்சர் துரைமுருகன் நக்கலாக சில்லரை மாற்றுகிறோம் என கூறுகிறார். அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார்.
இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் கொடுப்பது எப்போது என கேட்கும்போது அமைச்சர் துரைமுருகன் நக்கலாக சில்லரை மாற்றுகிறோம் என கூறுகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது. தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார். அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள்? திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக. 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது.
இதையும் படிங்க;- திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது.. 7 பேர் அதிரடி மாற்றம்.. முழு பட்டியல் இதோ..!
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம். ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திமுகவினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். ஏழை மக்கள் தங்கள் பகுதியிலேயே சிகிச்சை பெற அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. ஏழைகளுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு திட்டத்தில் கூட ஊழல் செய்தது திமுக. பட்டாசுத் தொழிலாளர்களை பாதுகாக்க அதிமுக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் கொடுப்பது எப்போது என கேட்கும்போது அமைச்சர் துரைமுருகன் நக்கலாக சில்லரை மாற்றுகிறோம் என கூறுகிறார். அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார். அது உங்கள் பணம் அல்ல. மக்கள் பணம். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என சொல்லிவிட்டு அவர்களை திமுக அரசு இழிவுபடுத்துகிறது. வாக்களித்த மக்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இறுமாப்போடு இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடாவடியில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விவகாரம் பற்றி நான் பேசிய பேச்சைக் கேட்டுதான் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். சாவி கொடுத்தால் இயங்கும் பொம்பை போல ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் தான் ஸ்டாலின். தமிழ்நாட்டில் புழங்கும் போதைப் பொருளை தடுக்காமல் என்ன செய்கிறது திமுக அரசு என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மின்சார கட்ட உயர்வு ஒரு போனஸ், சொத்துவரி உயர்வு மற்றொரு போனஸ். விவசாயிகளுக்கு கொடுத்து வந்த இலவச மின்சாரத்தை தடுத்து நிறுத்தி கொடுமை ஸ்டாலின் கொடுமை செய்துகொண்டிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தருவேன் என்று சொன்ன ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி முதியோர்களை ஸ்டாலின் வதைத்துக் கொணடிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்… அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!