தேர்தலுக்கு முன் அள்ளவிட்ட வாக்குறுதி ஏராளம்.. அதை நிறைவேற்றாமல் ஏமாற்றும் முதல்வர்.. ஸ்டாலினை விமர்சித்த TTV

Published : Sep 29, 2022, 12:38 PM ISTUpdated : Sep 29, 2022, 12:40 PM IST
தேர்தலுக்கு முன் அள்ளவிட்ட வாக்குறுதி ஏராளம்.. அதை நிறைவேற்றாமல் ஏமாற்றும் முதல்வர்.. ஸ்டாலினை விமர்சித்த TTV

சுருக்கம்

 கடந்த ஜுலை மாதம் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல தி.மு.க.வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இதையும் படிங்க;- திமுகவின் பல்டிகளும் துதிப் பாடல்களும் என்னென்ன.? லிஸ்ட் போட்டு 'முரசொலி'யை ரவுண்டு கட்டிய பாஜக.!

அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக கடந்த ஜுலை மாதம் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல தி.மு.க.வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;-  115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடியே வராதீர்! மதுரையில் கண்டன போஸ்டர் பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்