திமுக அநாகரீகமான பொய்யான பேச்சு.. ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக காங்கிரஸ்.. கூட்டணியில் உரசல்..!

Published : Sep 29, 2022, 12:19 PM IST
திமுக அநாகரீகமான பொய்யான பேச்சு.. ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக காங்கிரஸ்.. கூட்டணியில் உரசல்..!

சுருக்கம்

திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என காமராஜர் கூறியதாகவும் கடைசியில் அவருக்கே கல்லறை கட்டியது திமுக ஆட்சி தான் எனவும் தெரிவித்திருந்தார். இவரது வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பற்றி திமுக அமைப்புச் செயலாளர் ஆ.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இரண்டாம் கட்ட தலைவர்கள் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் திமுக எம்.பி. ஆ.ராஜா இந்து மதம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, அமைச்சர் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி இருந்த நிலையில் தற்போது ஆர்.எஸ்.பாரதியும் சிக்கியுள்ளார். 

திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி;- திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என காமராஜர் கூறியதாகவும் கடைசியில் அவருக்கே கல்லறை கட்டியது திமுக ஆட்சி தான் எனவும் தெரிவித்திருந்தார். இவரது வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

 

இதுதொடர்பாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி இது போன்ற (திமுகவின்) அநாகரிகமான பொய்யான பேச்சு. ஆர்.எஸ்.பாரதி  அவர்களின் பேச்சை வன்மையான கண்டிக்கிறேன். பெருந்தலைவரின் என்றும் வெட்டுவேன் என்று அரசியல் பேசியவர் இல்லை. அவர் புகழ் என்றும் வாழும் என மாணிக்கம் தாகூர் காட்டமாக தெரிவித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!