115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடியே வராதீர்! மதுரையில் கண்டன போஸ்டர் பரபரப்பு

Published : Sep 29, 2022, 09:53 AM ISTUpdated : Sep 29, 2022, 09:54 AM IST
115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடியே வராதீர்! மதுரையில் கண்டன போஸ்டர் பரபரப்பு

சுருக்கம்

மதுரை திருமங்கலத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறவர் கூட்டமைப்பு என்ற பெயரில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை திருமங்கலத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறவர் கூட்டமைப்பு என்ற பெயரில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  மறவர் கூட்டமைப்பு மதுரை திருமங்கலம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!

அதில், 20 சதவீத இடஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஓட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர்மரபு பழங்குடியினர் உள்ளிட்ட 115 சாதியினரை வஞ்சித்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் அளித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே எங்கள் பகுதிக்கு வராதீர்! வராதீர்!! வராதீர்!!! என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. திருமங்கலம் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்… அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!