திமுகவின் பல்டிகளும் துதிப் பாடல்களும் என்னென்ன.? லிஸ்ட் போட்டு 'முரசொலி'யை ரவுண்டு கட்டிய பாஜக.!

By vinoth kumarFirst Published Sep 29, 2022, 8:23 AM IST
Highlights

முதலில் சர்தார் படேல். அடுத்ததாக நேதாஜி. இப்போது, பகத்சிங் பா.ஜ.க. தலைமையானது கபளீகரம் செய்து கொள்ளும் இந்திய ஆளுமைகளின் பட்டியல் இது. புரட்சியாளர்கள் மறைந்த பிறகு அவரது எதிரிகளால் அவர்கள் கபளீகரம் செய்யப்படுவார்கள்' என்றார் லெனின். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது" - இன்றைய முரசொலி.

அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமேயில்லாமல் தூற்றுவதுமான மலிவான சந்தர்ப்பவாத அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது திமுக தான் என நாராயணன் திருப்பதி கடுமையான விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- முதலில் சர்தார் படேல். அடுத்ததாக நேதாஜி. இப்போது, பகத்சிங் பா.ஜ.க. தலைமையானது கபளீகரம் செய்து கொள்ளும் இந்திய ஆளுமைகளின் பட்டியல் இது. புரட்சியாளர்கள் மறைந்த பிறகு அவரது எதிரிகளால் அவர்கள் கபளீகரம் செய்யப்படுவார்கள்' என்றார் லெனின். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது" - இன்றைய முரசொலி.

இதையும் படிங்க;- அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்… அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!

திமுகவை துவங்கிய போது ஈவெராவை தரம் தாழ்ந்து விமர்சித்தவர்கள், பின்னர் அவரையே கொள்கை குன்று என்றழைத்த திமுக, புடவை கட்டிய முசோலினி என்று இந்திரா காந்தியை விமர்சித்து விட்டு, நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று உருகியது கருணாநிதி. ராஜாஜியை அவதூறு செய்து விட்டு, பின்னர் அவருடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த திமுக, பெருந்தலைவர் காமராஜரை அண்டங்காக்கா என்று தரக்குறைவாக விமர்சித்து விட்டு பின்னர் காமராஜருக்காக உருகிய வரலாறு கொண்ட திமுக,  என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார் வைகோ என்று சொல்லிவிட்டு மீண்டும் அரவணைத்தது திமுக, தமிழின துரோகிகளே, கொலைகார பாவிகளே என்று கூறிய வைகோவை சிறிதும் வெட்கமேயில்லாமல் உண்மையான ஹீரோ, போராளி என்றெல்லாம் புகழ்ந்தது திமுக.

கூடா நட்பு கேடில் முடியும் என்று அழுது புலம்பி விட்டு மீண்டும் காங்கிரசுடன் உறவு கொண்டு கூத்தாடி கொண்டிருப்பது திமுக. பரதேசி, பண்டாரம் என்று பாஜகவை சாடி விட்டு பின்னர் வாஜ்பாயை வானளாவ புகழ்ந்த கருணாநிதி. யாரால் ஆபத்து என்று எழுதி கேட்டு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெற்றார்களோ, அவர்களையே ஆரத்தழுவி புளகாங்கிதம் அடைந்த திமுக, இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும்போதே ஒருவரை தூற்றுவதும், பின்னர் அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமேயில்லாமல்  தூற்றுவதுமான மலிவான சந்தர்ப்பவாத  அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது திமுக தான். 

பாஜக என்றைக்கும் நேதாஜியையோ, சர்தார் படேல் அவர்களையோ, பகத் சிங்கையோ தூற்றியது இல்லை. மாறாக கொண்டாடிக்கொண்டே இருக்கிறோம். விரோதிகள் என்று அழைத்தவர்களை, துரோகிகள் என்று விமர்சித்தவர்களை அவர்கள் இருக்கும் போதே அரசியல் ஆதாயத்திற்காக திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்யும் பச்சை சந்தர்ப்பவாத கட்சி திமுகவே என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;-  திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது.. 7 பேர் அதிரடி மாற்றம்.. முழு பட்டியல் இதோ..! 

click me!