தமிழக அரசு ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான் நினைக்கிறது. ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனையில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன கருவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையானது அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
மினி லாரி மீது மோதி புல்லட்டுடன் தூக்கி வீசப்பட்ட வாலிபர்: பரபரப்பு சிசிடிவி காட்சி
அரசு நிதியிலிருந்து என்னென்ன பெற முடியுமோ அதை பெற்று மக்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செய்ய முடியாத திட்டங்களை மாவட்டத்தில் பல்வேறு செல்வாக்கு உள்ள நபர்களை சந்தித்து அவர்கள் மூலமாக நிதி பெற்று மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடையில் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை
தமிழக அரசு ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான் நினைக்கிறது. ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட உள்ளது. அப்பொழுது முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.