திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முதலமைச்சரின் பிறந்தநாள் பிரச்சாரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 21 மாதங்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் கட்டணம் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, குழந்தைகளுக்கு தொலைநோக்கு கல்வித் திட்டங்கள், மக்களை தேடி மருத்துவம், வீடு தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இரு புதுமையான ஏற்பாடுகளை செய்தது. பலருக்கு மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். தொண்டர்களின் இந்த ஏக்கத்தை போக்க நவீன தொழில் நுட்பத்தில் புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை 07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம் என்றும் திமுக அறிவித்தது. இந்த நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ஃபோன்-எ-விஷ் பிரச்சாரத்தில் 21,67,411 பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றனர். ஆக்மென்டட் ரியாலிட்டி பிரச்சாரத்தின் மூலம் 16,75,484 பேர் முதல்வருடன் செல்ஃபி எடுத்தனர்.
இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்
பிறகு அனைத்து அழைப்பாளர்களுக்கும் குரல் அழைப்பு மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். முதல்வர் முக ஸ்டாலின் இதுகுறித்து விடுத்த குரல் அழைப்பில், ‘தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியா முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து அழைப்புகளைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
மேலும் மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்’ என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பிரச்சாரங்களும் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு (பிப்ரவரி 28) எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த ஃபிளாஷ் கும்பல் நிகழ்வில் தொடங்கப்பட்டது. அவற்றை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்