சாக்கடை அரசியல் செய்பவர்கள் பற்றி பேச விரும்பவில்லை… பாஜகவை கடுமையாக விமர்சித்த பழனிவேல் தியாகராஜன்!!

By Narendran S  |  First Published Aug 13, 2022, 9:45 PM IST

பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று பாஜகவினர் தாக்குதல் குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். 


பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால், அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். பாஜகவினரின் கூட்டத்தைப் பார்த்த அமைச்சர் பிடிஆர், இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

Tap to resize

Latest Videos

இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவை விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு

இதுக்குறித்து பேசிய அவர், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம்  செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன், தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை,  பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும், பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன் என்று தெரிவித்தார். 

click me!