"ஒ.பி.எஸ்சே தொடர்ந்தால் கட்சி உடையும்..." - தம்பிதுரை சூசகம்

First Published Jan 2, 2017, 4:01 PM IST
Highlights


கிட்ட தட்ட முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்று கொள்வார் என்பது உறுதியாகிவிட்டது. 
அமைச்சர் உதயகுமாரை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகியான தம்பிதுரை இன்று அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளார் 
முதலில் பேட்டிகொடுத்திருந்த தம்பிதுரை பின்னர் தனது நாடாளுமன்ற துணை சபாநாயகர் லெட்டர் பேடிலேயே அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு விட்டார். 

சசிகலா பொதுசெயலாளர் மட்டுமின்றி தமிழக முதலமைச்சர் பதவியையும் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்   
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை அகிலேஷ் யாதவ் இடம் ஆட்சியும் முலாயம் சிங்கிடம் கட்சியும் இருந்ததால் தான் சமாஜ்வாடி கட்சி உடைந்தது என தெரிவித்தார்.

தம்பிதுரையின் இந்த பேச்சை கேட்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சியானார்கள், 
அதாவது ஒபிஎஸ் தலைமையில் ஆட்சி தொடர்ந்தால் கட்சி உடையும் என்பதை தம்பிதுரை இப்படி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே கட்சி உடையாமல் காப்பாற்ற படவேண்டுமானால் ஒபிஎஸ்  பதவி விலக வேண்டும் என்ற குண்டை போட்டார்  தம்பிதுரை.தம்பிதுரை இப்படி சொன்னாலும் அசரபோவதில்லை ஒபிஎஸ்.

ஒபிஎஸ்சை பொறுத்தவரை ஆரம்பநாள் முதலே அவர் சின்னம்மா சசிகலா வின் ஆள் தான் என்பது பல பேருக்கு தெரியாத  உண்மை. 
டி டி வி  தினகரன் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போதிலிருந்து  இன்று வரை ஒபிஎஸ்  அவருக்கும் விசுவாசமாக இருந்து வருகிறார், 
எனவே ஒ பி எஸ்  பதவி விலகுவதிலோ சின்னம்மா சசிகலா முதல்வராக பதவி எற்பதிலோ எந்தவித சிக்கலும் இல்லை என்கின்றனர் உள் விவரம்  அறிந்தவர்கள் 
 

click me!