கோமாளி கூடாராம்.. 'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்கும் நேரம் வந்துடுச்சு.. இபிஎஸ்ஐ இறங்கிய அடிக்கும் OPR.!

By vinoth kumarFirst Published Jul 15, 2022, 10:20 AM IST
Highlights

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. ரவீந்திரநாத் எடப்பாடி பழனிசாமி கூடாராம் கோமாளி கூடாரம் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. ரவீந்திரநாத் எடப்பாடி பழனிசாமி கூடாராம் கோமாளி கூடாரம் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

அதிமுகவில் எப்போது ஒற்றை தலைமை என்ற பிரச்சனை எழுந்ததோ அப்போதில் இருந்தே அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு வருகிறது. நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினமே சிறப்பு ததீர்மானம் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரது தீவிர ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரகாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

இதையும் படிங்க;- துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள்.. இபிஎஸ்க்கு சாபம் விடும் டிடிவி.தினகரன்.!

மேலும்,  ஓபிஎஸ் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி  இபிஎஸ் உத்தரவிட்டார். குறிப்பாக, மக்களையில் ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் அவருடைய சகோதரர் ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த 22 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக இபிஎஸ் தரப்பு சிலரையும், ஒபிஎஸ் தரப்பு சிலரையும் மாறி மாறி கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. ரவீந்திரநாத் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க;-  மனம் இரும்பாக இருந்தாலும் வலிக்கதான் செய்யுது.. ஒரு விஷயத்துக்குதான் அமைதியா இருக்கேன்.. ஜெயபிரதீப் உருக்கம்

இதுதொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி.. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி… கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி  “அம்மா” அவர்கள் எனக்கு கொடுத்த வரம்.. அதை நீக்கவும்.. ஒதுக்கவும் .. எடுக்கவும்.. கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்… கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம் !!

pic.twitter.com/4bhiYMgfsb

— P.Ravindhranath (@OPRavindhranath)

 

 

பதவி கொடுத்தவர்களுக்கே.. பாதகம் விளைவித்த இடையில் வந்த ‘எடை’யில்லா  ‘பாடி’க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்!! ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம்… ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்… என ரவீந்திரநாத் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- ஓபிஎஸ் மகனை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ‘முரசொலி’.. கட்சியை விட்டு தூக்கி பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

click me!