இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. தினசரி பாதிப்பு 2200ஐ கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 682ஆக உள்ளது. ஆகையால், சென்னை மாநகராட்சி பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா… ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று!!
இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— S M Nasar (@Avadi_Nasar)
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி..! நுரையீரல் பாதிப்பு எப்படி உள்ளது..? சிடி ஸ்கேன் முடிவு இதோ...