சின்னவர் என என்னை கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல்...! எதிர்கட்சிகளை கலாய்த்த உதயநிதி

By Ajmal KhanFirst Published Jul 15, 2022, 9:38 AM IST
Highlights

தன்னை சின்னவர் என்று கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அவர்கள் வயிற்றெரிச்சல் படட்டும் என தெரிவித்துள்ளார்.

 திமுக வெற்றி- உதயநிதி பங்கு

அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு இழந்த திமுக, மீண்டும் ஆட்சியை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதற்கிடையே நடைபெற்ற பல்வேறு சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் திமுகவிற்கு பின்னடைவாகவே அமைந்தது. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றன தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு திமுகவிற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் எனக்கூறப்பட்டது. குறிப்பாக அதிமுகவின் சாதனை எனக்கூறப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒத்த செங்கல் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். இதனையடுத்து அவரை பாராட்டும் வகையில் மு.க.ஸ்டாலின் பதவி வகித்திருந்த திமுக இளைஞர் அணிசெயலாளர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டது.

அண்ணாமலை- உதயநிதி திடீர் சந்திப்பு..! என்ன பேசினார்கள் என தெரியுமா..?

சின்னவர் உதயநிதி

இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் தனது தொகுதி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தீவிரமாக உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.  இந்த பிரச்சாரத்தின் மூலம் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை திமுக அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்தது. இதனையடுத்து உதயநிதிக்கு துணை முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரை வழங்கப்படவில்லை, இந்தநிலையில் திமுக மற்றும் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி கலந்துகொண்டுள்ளார். அந்தவகையில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி தன்னை சின்னவர் என அழைக்கும் படி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில்  இதற்க்கு உதயநிதி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி..! நுரையீரல் பாதிப்பு எப்படி உள்ளது..? சிடி ஸ்கேன் முடிவு இதோ...

வயிற்றெரிச்சல் படுகின்றனர்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி,  பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது திமுகவினர் கோஷம்போடும்போது, கட்  அவுட் வைக்கும் போதும்  தன்னை மூன்றாம் கலைஞர், நான்காம் தலைவர் என்று அழைப்பதாக தெரிவித்திருந்தார். இதில் தனக்கு விருப்பம் இல்லையென்று தெரிவித்தவர்,  எனவே பெரியவர்கள் ஏராளமானோர் இருக்கும் போது தன்னை  சின்னவர் என்று அழைப்பதில் மகிழ்ச்சிதான் என கூறியதாக குறிப்பிட்டார். தற்போது என்னை சின்னவர் என்று கூறினால் பல பேர் வயிற்று எரிச்சல் அடைவதாகவும், எனவே அவர்கள் வயிற்றெரிச்சல் படுவதற்காகவே சின்னவன் என கூப்பிடுங்கள் என கூறினார். தொடர்ந்து பேசியவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டும் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் சென்றதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளதாக கூறிய அவர், தற்போது  முதலமைச்சர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தந்தை நலம் பெற தி.மலையில் பிரார்த்தனை செய்த முதல்வரின் மகள் !

 

click me!