துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள்.. இபிஎஸ்க்கு சாபம் விடும் டிடிவி.தினகரன்.!

By vinoth kumar  |  First Published Jul 15, 2022, 8:52 AM IST

அதிமுகவில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களுக்குள் சண்டையே மூட்டி விட எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது. 


பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது.  நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அரியலூரில் அமமுக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெற்றது.  அப்போது, அவர் பேசுகையில்;- தற்போது அதிமுகவில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்களையும் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளதாக வெளிவந்துள்ள ஆடியோவில், அதிமுகவில் நடப்பவை குறித்து உண்மையாக பேசியுள்ளார். ஆனால், அதனை அவர் யாருக்கோ பயந்து கொண்டு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சி.வி.சண்முகம் கையில் இத்தனை எம்எல்ஏக்களா? அப்படினா இபிஎஸ் அவ்வளவுதானா.. பூதாகரமான பொன்னையன் ஆடியோ.!

இதுகுறித்து நான் பேசிய போது அவதூறு செய்தியை பரப்பினால் என் மீது வழக்கு தொடுக்கப்படும் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க தயார். அப்போது ஆடியோவில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட்டு அதிமுகவில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும். நீங்கள் யாரென்று தோலுரித்து நீதிமன்றத்தில் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க;- ராஜபக்சேக்கு வந்த நிலைமைதான் எடப்பாடியாருக்கும் வரும்.. டிடிவி.தினகரன் சரவெடி.!

அதிமுகவில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களுக்குள் சண்டையே மூட்டி விட எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இதை யாரும் மாற்ற முடியாது. 

பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது.  நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என டிடிவி.தினகரன் காட்டமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை தட்டித்தூக்கிய ஓபிஎஸ்ஸின் தர்மயுத்த தளபதிகள்.. இபிஎஸ்ஸின் மூவ் என்ன.?

click me!