குட்நியூஸ்.. முதியோர், கைப்பெண்கள் உதவித்தொகை உயர்வு.. எந்த மாதத்தில் இருந்து தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 22, 2023, 1:19 PM IST

ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 


ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகையை உயர்ந்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மணிப்பூரில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்..! பாஜக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய திமுக- போராட்ட அறிவிப்பு

இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முதியோர் ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும், கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை  ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முதியோருக்கான உதவித்தொகை உயர்த்தியது நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  ராஜகண்ணப்பன் இடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு.. முக்கிய பொறுப்பு ..!

அதேபோல், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்பதில் முதலமைச்சர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், இதுவரை ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது 

click me!