பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கபட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகையை உயர்ந்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவற்ற முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.1200ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.