இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்... கவர்ச்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

By vinoth kumarFirst Published Feb 23, 2021, 10:19 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்தத் தொடரில் காலை 11 மணிக்கு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக 11வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அதிமுக அரசின் பதவிக்காலம், மே 24ம் தேதி நிறைவடைவதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை தேர்தல் வருவதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர், எத்தனை நாள் நடக்கும் என்பது, இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவாகும். இந்த கூட்டத் தொடரில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், 110 விதியின் கீழ் ஏராளமான புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!