தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதிகளில் ஒருவரான சீமான் ஒரே ஒரு வழக்குக்கு பயந்து திமுகவை பங்காளி என்று கூறுவது வருத்தமளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைஇரண்டாம் கட்ட பாதயாத்திரையை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் இருந்து துவங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு நேரடியாக திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகியே காரணம். நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பல்லடம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரோடு அவருடைய உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் இருந்த நபர் அவர்களை கொலை செய்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தை குடிகார நாடாக மாற்றியதன் காரணமாக இந்த படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தென் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது.
சனாதனம் என்பது எந்த இடத்திலும் சமத்துவத்தை போதிக்கவில்லை -எம்.பி. திருமாவளவன் விமர்சனம்
தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் இந்தியா கூட்டணி குறித்து பேச முதலமைச்சர் புறப்பட்டுள்ளார். அவருக்கு தமிழகத்தின் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்தியா குறித்து அவர் பேச வேண்டாம். கும்மிடிப்பூண்டியை தாண்டி திராவிட முன்னேற்ற கழகம் எதுவும் செய்ய முடியாது.
தென்னிந்தியாவின் பப்புவாக உதயநிதி உள்ளார். மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி பேசியது போல் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பேசினால் இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி தொடர்ந்து சரியும். தற்போது ஐந்து சதவீதம் வரை இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
தொடர்ந்து இதுபோல உதயநிதி பேசி வந்தால் இந்தியா கூட்டணியின் வாக்குகள் 20% வரை குறையும். ஒரு கருத்தை பேசிவிட்டு எதிர்ப்பு வந்த உடன் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து வருகிறார். உதயநிதி பேசியதை காங்கிரஸ் கட்சியினரே எதிர்க்கிறார்கள். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மண்ணை கவ்வ போவது உறுதி. இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி 317 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. மோடி இன்னும் பிரசாரத்திற்கு வரவில்லை. அவர் பிரசாரத்திற்கு வந்தால் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.
ஆசை ஆசையாக திருமணத்திற்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி; சோகத்தில் மூழ்கிய திருமண மண்டபம்
ஆறு முறை ஆட்சியில் இருந்த பிறகும் சமூக நீதி குறித்து பேசி வருகிறார்கள். இவர்களால் சமூக நீதியை கொண்டு வர முடியவில்லையா? திராவிட முன்னேற்ற கழகம் குறித்து வட இந்தியாவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கூட பேசப்படுகிறது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை காட்டவில்லையா என்ற கேள்விக்கு தமிழகத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது. அவர்கள் நடவடிக்கைகளால் தமிழகத்தின் மாண்பு குறைந்து விடும்.
ஒரே ஒரு வழக்கிற்கு பிறகு சீமான் திமுகவின் பி டீமாக மாறிவிட்டார். திமுகவை பங்காளி எனக் கூறுகிறார். தற்போது சீமான் 2.0 ஆக இருக்கிறார். தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதிகளில் ஒருவரான சீமான் ஒரே வழக்கிற்கு பயந்து திமுகவை பங்காளி என கூறுவது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.