ஸ்பா பெண்களிடம் சில்மிஷம்.. முக்கிய பிரமுகர் உட்பட 5 பேர் பாஜகவில் இருந்து நீக்கம்.. அண்ணாமலை அதிரடி!

By vinoth kumar  |  First Published Sep 5, 2023, 8:38 AM IST

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பெண் ஒருவரிடம், ஸ்பா லைசன்ஸ் பெற்று தருவதாக கூறி ரூ.20 லட்சம் வாங்கிக் கொண்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார்.


ஸ்பா பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக திருவள்ளூவர் கிழக்கு மாவட்டத்தலைவர் செந்தில் குமார் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பெண் ஒருவரிடம், ஸ்பா லைசன்ஸ் பெற்று தருவதாக கூறி ரூ.20 லட்சம் வாங்கிக் கொண்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கேட்ட போது  பணம் கேட்டா திருப்பி தர முடியாது கூறி மிரட்டியுள்ளனர்.  மேலும், பெண்ணின் ஸ்பாவிற்கு சென்று அங்கே இருக்கும் இளம்பெண்களிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவில் இருந்து 5 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஜெகன் பாண்டியனை திமுக வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்:- கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பொன்.பாஸ்கர், முத்துராஜ் ஆகியோர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு புதிய மாவட்ட தலைவர் நியமனம் செய்யப்படும் வரை மாநில துணை தலைவராக செயல்பட்டு வரும் சக்கரவர்த்தி மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  Palladam Family Murder: பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொலை.! வெட்கமாக இல்லையா முதல்வரே-சீறும் அண்ணாமலை

அதேபோல் மற்றொரு அறிவிப்பில்;- திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் வி.சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு. ராஜசேகர் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

click me!