NLC: வேண்டாம் என்.எல்.சி.! விவசாயிகள் பாவம் - தலையில் அடித்து கதறும் அன்புமணி ராமதாஸ்

By Raghupati RFirst Published Jan 25, 2023, 5:34 PM IST
Highlights

என்எல்சியை வெளியேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்.எல்.சி நிறுவனத்துக்காக உழவர்களின் விலை நிலங்களை பறிக்கக்கூடாது,  தமிழ்நாட்டிலிருந்து என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துகாக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தர கூடியவை. அதனால் அந்த நிலங்களை விட்டுத்தர உழவர்கள் விரும்பவில்லை.

இதையும் படிங்க..அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடி விருப்பம்! ஆனால் இரட்டை இலை மட்டும்.? ஓபிஎஸ் காட்டிய அதிரடி

என்.எல்.சி தரப்பிலும் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட அவை எதுவும் வெற்றி பெறவில்லை. மேலும், 'பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் என்.எல்.சி நிறுவனம் அடுத்த இரு ஆண்டுகளில் அதாவது 2025-ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்கு தெரியும் தொலைவில் என்.எல்.சி நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று தெரிந்தே, அந்த நிறுவனத்துக்கு உழவர்களின் நிலங்களை பறித்து தருவது நியாமல்ல. தமிழ்நாட்டில் எந்தவித முதலீடுகளும் என்.எல்.சி செய்யவில்லை. 'ஆண்டுக்கு 11, 592 கோடி வருவாய் என். எல். சி ஈட்டி வருகிறது.  ஆனால் ராஜஸ்தான், ஒடிஷா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முதலீடு செய்கிறது.

இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

கடலூர் மாவட்டத்துக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்படாத கடலூர் மாவட்டத்துக்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்.எல்.சி நிறுவனத்துக்காக உழவர்களின் நிலங்களை பறிக்கக்கூடாது. என்.எல்.சிஐ தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

click me!