தமிழ்மகன் உசேன் 1953ம் ஆண்டுகளில் இருந்து எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை தமிழ்மகன் உசேன் வசித்து வந்துள்ளார். தற்போது அதிமுகவில் அவைத்தலைவராக இருந்து வருகிறார். இவரிடம் கார் இல்லாததால் எப்போதும் ஆட்டோவில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது, கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் வழங்கிய பிறகு, தற்போது தமிழ்மகன் உசேனுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கார் வழங்கியுள்ளார்.
தமிழ்மகன் உசேன் 1953ம் ஆண்டுகளில் இருந்து எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை தமிழ்மகன் உசேன் வசித்து வந்துள்ளார். தற்போது அதிமுகவில் அவைத்தலைவராக இருந்து வருகிறார். இவரிடம் கார் இல்லாததால் எப்போதும் ஆட்டோவில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்மகன் உசேனுக்கு புதிய ஸ்கார்பியோ காரை வழங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்;- திருச்சியில் மாநாடு.! இபிஎஸ் தலைமையில் ஆட்சி..! செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன தெரியுமா.?
இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில்;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன், கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, கழகத்தின் சார்பில் ``TN 06 AD 5666" என்ற பதிவு எண் கொண்ட ``Mahindra Scorpio” புதிய வாகனத்தை வழங்கி, தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்;- ஊழலை ஒழிப்பதற்காகவே பிறந்தவர் போல பேசிவருகிறார் அண்ணாமலை; கே பி முனுசாமி பாய்ச்சல்