அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி... ஜெயக்குமார் விமர்சனம்!!

By Narendran S  |  First Published Apr 16, 2023, 6:16 PM IST

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்றும் அவர் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்றும் அவர் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்  கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: திருச்சியில் மாநாடு.! இபிஎஸ் தலைமையில் ஆட்சி..! செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன தெரியுமா.?

Tap to resize

Latest Videos

மேலும் இதில் திமுக அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவெற்றபட்டடதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர்.

இதையும் படிங்க: 2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு

அண்ணாமலையைக் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. எங்க அரசியல் வாழ்க்கையை பாருங்கள். நாங்கள் 30, 40 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளோம். ஆனால், அவர் வெறும் இரண்டு ஆண்டுகள் தான் அரசியலில் இருந்துள்ளார். அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டியை போன்றவர் என்று தெரிவித்துள்ளார். 

click me!