சென்னையில் சம்பவம் பண்ணப் போறீங்களா? பயமுறுத்தாதீங்க ஸ்டாலின் ஐயா.. முதல்வரை நக்கல் அடிக்கும் தமிழக பாஜக.!

Published : Aug 23, 2022, 12:30 PM ISTUpdated : Aug 23, 2022, 12:32 PM IST
சென்னையில் சம்பவம் பண்ணப் போறீங்களா? பயமுறுத்தாதீங்க ஸ்டாலின் ஐயா.. முதல்வரை நக்கல் அடிக்கும் தமிழக பாஜக.!

சுருக்கம்

நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார். 

நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை சென்னையில் செய்யப் போறோம்; காத்திருங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின். காத்திருப்பதா? நேற்று மாலை பெய்த சிறு மழையால் சென்னையில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மழை நீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் நிரம்பி ஓடுவதால் அவைகள் மரணப்பள்ளங்களாக மாறி விட்ட சம்பவத்தை சொல்கிறீர்களா? நேற்று இரவு பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டு  இருளில் மூழ்கிய பயங்கர சம்பவம் நடைபெற்றதை சொல்கிறீர்களா? 

இதையும் படிங்க;- இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!

தெருக்கள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளித்து கொண்டிருக்கும் கொடூர  சம்பவத்தை சொல்கிறீர்களா? பாதுகாப்பு விதிகளே கடைபிடிக்கப்படாமல் தோண்டிய பள்ளங்களினால் பாதசாரிகளுக்கு ஏற்பட்டு  கொண்டிருக்கும் பயங்கர சம்பவங்களை சொல்கிறீர்களா? அல்லது அந்த பணியாளர்களால் தினந்தோறும் கழிவு நீர் குழாய்களும், மின் இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்படும் அவல சம்பவங்களை சொல்கிறீர்களா? போதும் ஐயா போதும்! நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். 

அதை விடுத்து, மேலும் பல சம்பவங்களை சென்னையில் செய்ய போறோம் என்று பயமுறுத்தாதீர்கள் ஐயா! சென்னை வாசிகளால் தாங்க முடியாது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை..! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட புதுவை முதலமைச்சர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேரு குடும்பத்தில் டும் டும் டும்.. காதலியை கரம் பிடிக்கும் பிரியங்கா காந்தி மகன்.. யார் இந்த அவிவா பெய்க்?
இபிஎஸ் பேசும்போது அதிர்ச்சி.. பக்கத்தில் மயங்கி சரிந்த மா.செயலாளர்.. பதறிய தொண்டர்கள்.. என்ன நடந்தது?