அமித்ஷாவுடன்- ஸ்டாலின் அடுத்த மாதம் சந்திப்பா..? கண்டிப்பாக இதை பற்றி பேச வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

By Ajmal KhanFirst Published Aug 23, 2022, 8:53 AM IST
Highlights

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே அதிமுக பொதுக்குழு நடைபெற்றதாகவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தங்கள் தரப்பிற்கு சாதகமாக அமையும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு..?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் துரைராஜ் இல்ல விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் ஒற்றை தலைமை கோரிக்கையை ஏற்று ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாக 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்ததாக தெரிவித்தார். பொதுக்குழுவும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக கூறினார். தற்போது அந்த பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனிநீதிபதி தீர்ப்பு அளித்துள்ளதாகவும், அந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு  விசாரணையில் இபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு அமையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 

இலவசங்கள் தரும் கட்சியோடு பாஜக கூட்டணி இல்லையா..? அண்ணாமலையின் அதிரடி பதில்

ஸ்டாலின்- அமித்ஷா சந்திப்பு

மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து  புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் திமுக தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகள் கொடுத்ததாகவும் ஆனால் தற்போது திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை மாறாக புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பணியிலேயே முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். செப்டம்பர் 3ஆம் தேதி கேரளாவில் அமித்ஷா தலைமையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிக்கோபார் கொண்டது தென் மண்டல குழு. 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக தெரிவித்தவர், அந்த சமயம் காவிரி மற்றும் முல்லை பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து முதல்வர் எடுத்துரைக்க வேண்டும் என அதிமுக சார்பாக கேட்டுக் கொள்வதாக கூறினார். மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்படும் எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை... ! இபிஎஸ் சாதிப்பாரா..? சறுக்குவாரா..?

click me!