அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை... ! இபிஎஸ் சாதிப்பாரா..? சறுக்குவாரா..?

By Ajmal KhanFirst Published Aug 23, 2022, 8:16 AM IST
Highlights

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் மேல் முறையீடு செய்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது. 

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் 23 ஆம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை நிராகரிப்பட்டது. மேலும்  ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.  ஓபிஎஸ் எதிர்ப்புக்கு மத்தியில் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 23ஆம் தேதியன்று இருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 

 நீதிமன்றத்தில் இபிஎஸ் மேல் முறையீடு

மேலும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?

இபிஎஸ் சாதிப்பாரா..?

எனவே  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ்  கேவிட் மனுவை  தாக்கல் செய்துள்ளார்.  மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதங்களை கேட்ட பிறகு எந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெறவுள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். 
 

இதையும் படியுங்கள்

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு.. 6 பேருக்கு ஜாமீன் கொடுத்து அந்த 3 பேருக்கு நோ சொன்ன மாஜிஸ்திரேட்.!

 

click me!