கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த சென்றார். அப்போது, அவர் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 6 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அதில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் காஷ்மீரில் இருந்து கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த சென்றார். அப்போது, அவர் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- அமைதியை விரும்பும் பாஜகவில் இப்படி ஒரு நிகழ்வா? நான் முன்னாடியே வந்து இருந்தா தடுத்து இருப்பேன்.. அண்ணாமலை.!
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத் திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப், தனலட்சுமி, சரண்யா, தெய்வானை உள்ளிட்ட 9 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலில் கைதான 6 பேரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- தமிழகப் பொருளாதாரத்தை சீரழிக்கும் பிடிஆர் தியாகராஜனின் ஈகோ, ஜாலப் பேச்சு: பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்
இதையடுத்து சரண்யா, தனலட்சுமி, தெய்வானை ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அரசு உதவி வழக்கறிஞர் கோபால் ஆஜராகி, 3 பேரும் சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து பெண்கள் 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மாவட்ட நீதிபதி, இவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.