அதிமுகவால் இந்த கொள்கையை எப்போதும் ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான்.
அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான் என கூறிய கே.எஸ்.அழகிரிக்கு பாஜக கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவால் இந்த கொள்கையை எப்போதும் ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான்.
இதையும் படிங்க;- தவறான சிகிச்சை சிறுமி உயிரிழந்த விவகாரம்! இப்போ ரத்தம் கொதிக்கவில்லையா? ஸ்டாலினிடம் நாராயணன் திருப்பதி கேள்வி!
அதிமுக தற்போது பாஜக மோடியின் மறுஉருவமாக உள்ளது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்துதான் வருகிறது. அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அக்கட்சி மீண்டும் பெற முடியாது என கே.எஸ்.அழகிரி விமர்சித்ததிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- சொந்த கட்சியின் தலைவரை கொன்ற குற்றவாளிகளை ஆரத் தழுவி வாழ்த்துபவர்களுடன் கூட்டணியை தொடரும் வெட்கங் கெட்ட காங்கிரசுக்கு, முன்னாள் பிரதமரை கொன்றவர்களை கொண்டாடும் கட்சிகளுடன் கூட்டணியை தொடரும் மானங்கெட்ட காங்கிரசுக்கு பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசுவதற்கு தரமும் இல்லை, தகுதியும் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க;- கழுவி கழுவி ஊற்றி விட்டு.. பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்தவர் கோமாளியா? உத்தமன் அண்ணாமலை கோமாளியா? BJP