அதிமுக 4ஆக பிளவு பட்டதாக கூறுகிறார்கள்.! ஆனால் திமுகவோ அமைச்சர்களால் 7 துண்டாகிவிட்டது - இபிஎஸ் ஆதரவாளர்

By Ajmal Khan  |  First Published Nov 21, 2022, 8:03 AM IST

திமுக அமைச்சர்கள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையென்று தெரிவித்த அதிமுக மூத்த நிர்வாகி ராஜன் செல்லப்பா, தற்போது திமுக 7ஆக பிளவுபட்டுள்ளதாக விமர்சித்தார்.
 


அமைச்சர்களுக்குள் மோதல்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு கட்சியும் வாக்கு சாவடி முகவர்களோடு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரையில்  எல்லீஸ் நகர் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சரோடு அமைச்சர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், பொன்முடி,  பழனிவேல்ராஜன் தியாகராஜன் ஆகியோரின் பேச்சு எல்லாம் மக்கள் முகம் சுளிக்க வைக்கிறது.

Tap to resize

Latest Videos

ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்

7 துண்டாக திமுக

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளை முதலமைச்சரால் கட்டுப்படுத்த முடியவில்லை என குற்றம்சாட்டினார். அதிமுக இரண்டாகப் போய்விட்டது நான்காக போய்விட்டது என்ற பேசுகிறார்கள், ஆனால் இன்றைக்கு திமுகவோ  துரைமுருகன், சபரீசன், பிடிஆர் தியாகயராஜன் என்று 7 துண்டாக போய்விட்டது.  இந்த மோசமான ஆட்சி எத்தனை நாள் தாக்குபிடிக்க முடியும் என தெரியவில்லை. திமுக வீழ்த்த வேண்டாம் அதுவாக விழுந்து விடும் என கூறினார். எடப்பாடியார்க்கு இணையாக தமிழகத்தில் எந்த தலைவரும் இல்லை, தனது உழைப்பால் இன்றைக்கு உயர்ந்து உள்ளார். ஆனால் ஸ்டாலின்  கருணாநிதி பெயரை வைத்துக்கொண்டுதான் அவரால் வர முடிந்ததாக கூறினார்.

பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை.. உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. அமைச்சர் மா.சு

லாப நோக்கத்தோடு திமுக

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு முதலமைச்சர் பேண்ட் ,சட்டை அணிந்து கொண்டு சென்று பார்வையிட்டார். ஆனால் எடப்பாடியார் வேட்டியை மடித்துக் கொண்டு நிலத்தில் இறங்கி ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இன்றைக்கு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள், பால் விலையை உயர்த்தி விட்டார்கள், மடிக்கண்ணி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள், அம்மா உணவகத்தை மூடிவிட்டார்கள்,  குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை கூட திமுக விட்டு வைக்காமல் மூடிவிட்டார்கள். அதேபோல் காவல் நிலையம் அருகே படுகொலை நடந்து சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கேடாக உள்ளது. நிதிகளைப் பெருக்காமல் விலைவாசி உயர்த்தி லாப நோக்கத்தோடு திமுக செயல் படுகிறது என விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்
100 நாட்களில் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்..! செந்தில் பாலாஜி உறுதி

click me!