ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியே வேற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு தேர்தல்- பரிசு மழை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டயிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், தேமுதிக சார்பாக ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகாவும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று தங்களுடய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக- திமுக களம் இறங்கியது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத்த்திற்கு மேலாக ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பணம் மற்றும் பரிசு மழை பெய்தது.இதனையடுத்து நேற்று நடைபெற்ற தேர்தலில் மக்கள் இரவு 9 மணி வரை ஆர்வமாக வாக்களித்தனர். வாக்கு சதவிகிதம் 75% தாண்டியது.
இன்னும் என்னுடைய ஆட்டம் முடியல.. சைலண்ட் மோடில் இருந்து கொண்டே இபிஎஸ்க்கு ஆப்பு வைக்கும் ஓபிஎஸ்?
இடைத்தேர்தல் - எதிர்கட்சி வெற்றி இல்லை
இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், திருமங்கலம் பார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம் ஈரோடு கிழக்கு தொகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. வாக்காளர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து உதயநிதி நடித்த திரைப்படம் போட்டு காட்டி பணம் கொடுத்துள்ளனர். மருங்காபுரி மதுரை கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதே இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இனி நடக்கலாம்
எந்த மாநிலத்திலும் பாஜக மற்ற கட்சியினரின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதில்லை. கட்சிகளில் இருக்கும் குரூப் பாலிடிக்ஸ் காரணமாக அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு எம்எல்ஏக்கள் குழுவாக வெளியே வருகிறார்கள். அதனால்தான் பல மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் குரூப் பாலிடிக்ஸ் தற்போது வரை இல்லை இனி நடக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
பிரதமர் மோடியின் சகோதரருக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு..! சென்னை மருத்துவமனையில் அனுமதி