கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் மோடியால் பயனடைந்தவர்கள் தான் - வானதி விளக்கம்

By Velmurugan s  |  First Published Feb 28, 2023, 9:51 AM IST

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவருமே பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற பயனாளிகள் தான் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கிவைத்துள்ளேன். மத்திய அரசில் அதிக அளவிற்கு பெண் பயனாளிகள் தான் பயன்பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பயனாளிகள் தான்.

Tap to resize

Latest Videos

undefined

பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் அடிப்படையில் பெண்களை மையப்படுத்தி ஆட்சியை நடத்திவருகிறார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக  உள்ளனர். ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு என்பது திமுக மக்களுக்கு  திட்டங்கள் செய்துள்ளதால் ஓட்டு போடுவார்கள் என்றால் எதற்காக வாக்காளர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கி மக்களை அடைத்துவைக்கின்றனர். மக்களை சுற்றுலா அழைத்துசெல்வது போன்ற புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

திமுக அரசின் மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளது. அதனை சரிகட்டப்பார்க்கிறது. ஆனால் அது நடக்காது. தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் சிறுமி கூட்டு பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். 

மருத்துவகல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது. உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்ரகள். நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துகொள்ளலாம் என்றார்.

click me!