AIADMK: அன்று குருமூர்த்தி.. இன்று நயினார் நாகேந்திரன்.. காற்றில் பறக்கும் அதிமுக மானம்..!

By vinoth kumarFirst Published Jan 26, 2022, 8:18 AM IST
Highlights

அதிமுகவை விமர்சித்தால் எப்படி பதிலடி கிடைக்கும் என்பதை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு வெளிப்படுத்திக் காட்டியது அக்கட்சி மகளிரணி. ஆனால், ஜெயலலிதா எனும் ஆளுமை இல்லை. அதிமுகவினரின் வரிகளில் சொல்வாதானால் தாயில்லா பிள்ளைகள். அதனால்தான் குருமூர்த்தி, நயினார் நாகேந்திரன் போன்றோர் ஏகத்துக்குமாக அதிமுகவை விமர்சித்து வருகின்றனர். 

அன்று அதிமுகவினரை ஆண்மை இல்லாதவர்கள் என்று விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியால் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினரைக்கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

அதிமுகவை விமர்சித்தால் எப்படி பதிலடி கிடைக்கும் என்பதை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு வெளிப்படுத்திக் காட்டியது அக்கட்சி மகளிரணி. ஆனால், ஜெயலலிதா எனும் ஆளுமை இல்லை. அதிமுகவினரின் வரிகளில் சொல்வாதானால் தாயில்லா பிள்ளைகள். அதனால்தான் குருமூர்த்தி, நயினார் நாகேந்திரன் போன்றோர் ஏகத்துக்குமாக அதிமுகவை விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை மாணவி லாவண்யா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் மாநில துணை தலைவரும், சட்டமன்ற பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசுகையில்;- தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதே எழுச்சி தற்போது அண்ணாமலை தலைவராக உள்ள இந்த நேரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்கட்சி போல மக்கள் பிரச்னைகளை பாஜதான் பேசி வருகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுக எம்எல்ஏவைக் கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் பேச வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். 4 பேர் உள்ள நாங்கள் எப்படி பேச முடியும்.

எதிர்கட்சியாக இல்லாமல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. அதேபோல நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு தவறுகளை இழைத்த காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் சென்றது. இல்லை என்றால் பாஜக தயவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கும். மேலும் இந்த தோல்வியும் நல்லதுதான். வரும் காலங்களில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

இவரது பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பு மற்றும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அதிமுக தோள் மேல் தொத்திக்கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்கள் என அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி ‘நீங்களாம் ஆம்பளயா.. உங்களுக்கெல்லாம் ஆண்மை இருக்கிறதா?’ என அதிமுகவினரை கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து விலகி பாஜக இணைந்து எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன் இப்படி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

click me!