மேல்மருவத்தூரில் திடீர் சந்தித்துக் கொண்ட திருமாவளவன் அண்ணாமலை பரஸ்பர நட்பு பரிமாறிக் கொண்ட காட்சி அனைவருக்கும் அதிசயத்தை உண்டாக்கியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் திடீர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு மரியாதையுடன் பக்தர்கள் அஞ்சலியுடன் அவரது உடல் சித்தர் நல்லடக்கம் முறையில் மேற்கொள்ளப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இறுதி சடங்கிற்கு வராத பிரமுகர்கள் தற்போது நேரில் வந்து அவரது மகன்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமாரை விசாரித்து ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் வந்து பங்காரு அடிகளார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்; கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் திருடிய மர்ம நபர்கள்
இதனை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் அங்கு வருகை புரிந்ததை பார்த்து, இருவரும் நேரில் பரஸ்பர நட்பு பரிமாறிக் கொண்டு, சில வார்த்தைகள் பேசி கொண்டனர். இதனைப் பார்த்த இரு கட்சியினரும் மகிழ்ச்சி கொண்டனர். இதை அரசியல் முன்னோட்டமாக சிலர் பார்க்கின்றனர்.