சைலேந்திரபாபுவை நியமிக்க முடியாது..! வேறு ஒருவரை பரிந்துரையுங்கள்- திமுக அரசிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆளுநர் ரவி

By Ajmal Khan  |  First Published Oct 23, 2023, 1:45 PM IST

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிப்பதற்கான கோப்புகளை ஆளுநர் ரவி நிராகரித்துள்ளதாகவும், வேறு ஒருவரின் பெயரை  பரிந்துரை செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 


ஆளுநர் ரவி- தமிழக அரசு மோதல்

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசுக்கும்,  ஆளுநர் ரவிக்கும் இடையிலான மோதல் போக்கு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நீட் விலக்கு மசோதாவில் தொடங்கிய மோதல் தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் வரை நீடிக்கிறது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தங்களை ஆளுநர் ரவி பேசு வருவதாகவும் ஆளுங்கட்சியால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

இதனிடையே அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பான டிஎன்பிஎஸ்சிக்கு தலைவர் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. தற்போது நான்கு உறுப்பினர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன. பல மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன . இதனால் அரசு பணிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

 டிஎன்பிஎஸ்சி தலைவர் சைலேந்தி பாபு .?

இந்த நிலையில், டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவை, டிஎன்பிஎஸ்சி  தலைவர் பதவிக்கும், மேலும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்யவதற்கான பெயர்களை  தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் ஆளுநர் ரவி, சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிப்பது தொடர்பான கோப்புகளில்  ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் தமிழக அரசிற்கும் இரண்டு முறை கோப்புகளை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து ஆளுநருக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கோப்புகளை அனுப்பியது. இந்த சூழ்நிலையில் தற்போது சைலேந்திரபாபுவை நியமிக்கும் கோப்புகளை நிராகரித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புகளை நிராகரித்த ஆளுநர் ரவி

மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லையென கூறி நிராகரித்து விட்டதாகவும், வேறு ஒருவரை பரிந்துரை செய்யவும் ஆளுநர் ரவி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசின் முடிவிற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதால், தமிழக அரசின் அடுத்த கட்டம் பிளான் என்ன என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

 அமித்ஷா பிறந்தநாள்... முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்.!சைலண்ட் மோடில் இபிஎஸ் கூட்டணியினர்- ஷாக்கில் பாஜக

click me!