பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகியது மனவேதனை அளிக்கிறது.! புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்.?-வானதி

By Ajmal Khan  |  First Published Oct 23, 2023, 12:25 PM IST

நடிகை கவுதமி பாஜகவில் இருந்ததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா? ராஜினாமா கடிதம்  கொடுத்தவுடன் புகார் மீது வழக்கு பதிவு செய்திருப்பது ஏன் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 


கோவை கார் குண்டு வெடிப்பு

கோவையில் கடந்த ஆண்டு கார் சிலிண்டர் குண்டு வெடித்ததில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தபட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கார் சிலிண்டர் குண்டு மூலம் தீவிரவாதி ஒருவர் பாதிப்பு ஏற்படுத்த முயன்றார். கோட்டை ஈஸ்வரன் அருளாள் கோவை பாதுகாக்கபட்டது.கோவை அமைதி,வளத்திற்காக பூஜைகள் நடத்தப்பட்டது. பிரதமரை திமுகவினர் கேவலமான முறையில் பதிவு செய்கின்றனர். அவர்கள்  மீது எந்த நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு  செய்யும் பா.ஜ.கவினரை கைது செய்கின்றது. 

Latest Videos

undefined

இரு மடங்கு கொடி கம்பம் நடப்படும்

தமிழகம் முழுவதும் பாஜகவினர் தமிழக அரசால்  எப்படி எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பபட்டுள்ளது. இந்த குழு பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி அறிக்கை கொடுக்கும். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இரவோடு இரவாக கொடி கம்பத்தை  எடுத்து  சென்று இருக்கின்றனர்.  கொடி கம்பத்திற்காக மிகப்பெரிய  ஆப்ரேசன் நடத்தப்பட்டு இருக்கின்றது. 10 ஆயிரம் கொடி கம்பம் நடப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கின்றார். ஒவ்வொரு தொகுதியிலும. மாநில தலைமை  சொல்லும் எண்ணிக்கையை விட  இரு மடங்கு எண்ணிக்கையில் நடப்படும். ஒவ்வொரு வீட்டிலும் கொடிகம்பம்  ஏற்றப்படும். அநீதியை எதிர் கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.

கவுதமி விலகியது மன வேதனை தருகிறது

இதனை தொடர்ந்து நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், கௌதமி மீது அன்பு, பாசம் ,மரியாதை உண்டு கட்சியில் தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்ணாக இருந்தார். கட்சியை நேசிக்க கூடிய பெண்ணாக இருந்தார். அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்து இருப்பது  மன வேதனையாக இருக்கிறது. தேசிய மகளிர் அணியில் இணைந்து பணியாற்ற அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர்  மாநிலத்தில் வேலை செய்வதாக சொல்லி இருந்தார். தான் ஒரு சினிமா நட்சத்திரம், தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எப்பொழுதும் நினைக்காதவர். கட்சியின் அடிப்படை தொண்டராக இருந்தவர். அவர் கடிதம் மன வேதனையை கொடுக்கிறது.

வழக்கு பதிவுக்கு கால தாமதம் ஏன்.?

தனிப்பட்ட பெண்மணியாக அவர் எதிலும் சோர்ந்து போகக் கூடிய ஆள் கிடையாது. தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்மணி. ஒரு வழக்கு தொடர்பாக கட்சியில் ஒரு சிலரை பாதுகாப்பாத சொல்லி இருக்கின்றார். முழுமையான தகவல் தெரியவில்லை. கட்சிக்காரர்களை யாரும் சட்டத்திற்கு புறம்பாக பாதுகாக்க போவதில்லை. மாநில தலைவரிடம் முழுமையாக சொல்லி இருக்கலாம்.

உதவி செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். மாநில அரசு புகார் கொடுத்து இத்தனை நாள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். பாஜகவில் இருந்ததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா? ராஜினாமா கடிதம்  கொடுத்தவுடன் புகார் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கட்சியை விட்டு வந்தால்தான் வழக்கு பதிவு செய்யப்படும் என சொல்லி இருக்கிறதா? எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்

ஆதரவும் இல்லை, ஒத்துழைப்பும் இல்லை..! பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்- நடிகை கவுதமி

click me!