வங்கி சேவைகள் விரைவில் சீராகும் - வாய் திறந்தார் மோடி

First Published Dec 31, 2016, 8:20 PM IST
Highlights


அனைவரும் எதிர்பார்த்த மோடி உரை துவங்கியது . அடுக்கடுக்காக வசனத்துடன் சலுகைகளை அறிவிக்க துவங்கியுள்ளார். 

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை  தடை செய்த அறிவித்தபின், ஏறக்குறைய 50 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது வங்கிச் சேவைகள் விரைவில் சீராகும் என்று பிரதமர் மோடி தெரிவி்த்தார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் வங்கிச்சேவைகள் குறித்துக் கூறுகையில், “புது வருடத்துக்கு பின் வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில் உள்ள சிறுசிறு குறைகளை சரி செய்ய முயற்சி செய்யப்படும். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மக்களிடையே கருப்புபணம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளது. வங்கி அதிகாரிகள் அரசின் நடவடிக்ைகக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தனர். சில அதிகாரிகள் பெரிய அளவில் தவறும் செய்துள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தவறு செய்த வங்கி அதிகாரிகளை விட்டுவைக்கமாட்டோம்’’ என்றார்.

 

click me!