செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்துவிட்டு அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் சொல்லி வந்த திராவிட மாடல் ஆட்சியின் திமுக நாடகம் தான் இது.
செந்தில் பாலாஜி சாதாரண மனிதர் கிடையாது. அவர் ஒரு அமைச்சர். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் அவர் அமலாக்கத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாறாக சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழக முதலமைச்சர் கூட செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஆதரவு தெரிவித்து வருகிறார்.
“செந்தில் பாலாஜி கைது” தேர்தல் நெருங்கும்போது இன்னும் பல வேலைகளை செய்வார்கள் - சீமான் கருத்து
அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் பெற்ற குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்னர் 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டபோது கூட இதுபோன்ற ஒரு சூழலை பார்த்ததில்லை. அப்பப்பட்ட திரைக்கதை, வசனம், நாடகத்தை திமுக தற்போது செய்துகொண்டிருக்கிறது.
சிறுமியை கற்பழித்த சிறை வார்டன் போக்சோ சட்டத்தில் கைது
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்துவிட்டு அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் அது திமுகவுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும். எனவே முதல்வர் தனது பொறுப்பை உணர்ந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.