அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக மத்திய அரசின் மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சிகாலமான 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கு பல திருப்பங்களை சந்தித்துள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்.? புதிய அமைச்சர் யார்.? வெளியான பரபரப்பு தகவல்
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக செந்தில் பாலாஜி மீது சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 24 மணி நேரத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் நீதிபதியை மருத்துவமனைக்கு அழைத்து வர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக மருத்துவத்துறை டாக்டர்கள் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லையென நாடகமாடுவதாக அமலாக்கத்துறை சந்தேகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லிக்கு அழைத்து செல்ல திட்டமா.?
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரைப்படி பொய்யான மருத்துவ அறிக்கை வெளியிட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவா என்பதை பரிசோதிக்க சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவர்கள் அல்லது எய்ம்ஸ் டாக்டர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வர இருப்பாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்குள்ளான வழக்கு என்பதால் டெல்லிக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இல்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால் விசாரணைக்கு பாதிப்பு வரும் என்பதால் டெல்லிக்கு கொண்டு செல்ல அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை...