பரந்தூர் விமான நிலைய திட்டம்..! பின்வாங்குகிறதா தமிழக அரசு..? போராட்ட குழுவோடு அமைச்சர் குழு அவசர ஆலோசனை

By Ajmal Khan  |  First Published Dec 20, 2022, 8:57 AM IST

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக போராட்டக்குழுவினரோடு தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சவார்த்தையின் அடிப்படையில் பரந்தூர் விமானநிலையம் திட்டமிட்டபடி அமைக்கப்படுமா? அல்லது மாற்று இடத்தில் அமைக்கப்படுமா என்பது தெரியவரும்


பரந்தூரில் சர்வதேச விமானநிலையம்

நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கம் நிலையத்திற்கு மாற்றாக புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக சென்னை காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.  இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

என் ஐ ஏ அதிகாரி என நடித்து ஏமாற்றிய பாஜக நிர்வாகி.!செல்போன் கடைக்காரரிடம் 20 லட்சம் கொள்ளை.! சிக்கியது எப்படி?

 இதனையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் கிராம மக்களோடு பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர். இதனையடுத்து பரந்தூர் பகுதி விவசாய பகுதியாக இருப்பதால் மாற்று இடத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரந்தூர் சர்வதேச விமானநிலையம்   அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வந்த நிலையில் தேற்று பேரணியாக செல்ல முற்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து பரந்தூர் விமான நிலை திட்டம் தொடர்பாக கிராம மக்களுடன் தமிழக அமைச்சர்கள் எ.வ வேலு, தாமோ அன்பரசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். 

எட்டுவழிச்சாலை, விமான நிலைய விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் - வானதி சீனிவாசன்

சென்னை தலைமைசெயலகத்தில் நடைபெறுத் இந்த ஆலோசனையில் பரந்தூர் விமானநிலையம் உள்ள பகுதிக்கு மாற்றாக வேறொரு இடத்தில் விமான நிலையம் அமைக்க போராட்டக்குழுவினர்  வலியுறுத்தவுள்ளனர். தமிழக அரசை பொறுத்தவரை பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. எனவே இன்றைய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் தொடருமா.? பரந்தூர் விமான நிலையம் அதை இடத்தில் அமைய உள்ளதா? அல்லது செங்கல்பட்டு பகுதிக்கு மாற்றம் செய்யப்படுமா என்பது தெரியவரும் 

இதையும் படியுங்கள்

வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் பரந்தூர்..! இந்த இடத்திலேயா விமான நிலையம் அமைக்க போறீங்க..? விவசாயி கேள்வி

click me!