நாங்க கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது.. மார்த்தட்டும் இபிஎஸ்..!

Published : Dec 20, 2022, 06:56 AM ISTUpdated : Dec 20, 2022, 07:07 AM IST
நாங்க கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது.. மார்த்தட்டும் இபிஎஸ்..!

சுருக்கம்

 கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் சென்றுவர மானியத் தொகை அறிவித்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்களை அனைவரையும் பிற்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். 

தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் தான் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னை வானகரத்தில் உள்ள ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி;- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆண்டுதோறும் அததிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் சென்றுவர மானியத் தொகை அறிவித்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்களை அனைவரையும் பிற்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். 

இதையும் படிங்க;- அதிமுக முன்னாள் எம்பிக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செய்த ஒரு வரலாற்றுப் புரட்சியால் கிறிஸ்ததவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பலனை இன்றுவரை பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டது. அதற்கு ஐந்து கோடி வரை அதற்கான நிதி வழங்கப்பட்டது. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாகவும், முழுமையாகவும் செயல்படும் விதத்தில் அரசின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.  சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சி அதிமுக. 

அதிமுக கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது. ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணையை அமைத்த கிறிஸ்தவர் பென்னிகுயிக்கு மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்தினார். குடியரசுத் தலைவர் பதவிக்கு சிறுபான்மை சேர்ந்தவர் வரவேண்டும் என்று ஏபிஜே அப்துல் கலாமை முன்மொழிந்தவர் ஜெயலலிதா. ஏழை, எளிய கிறிஸ்தவ மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் முழுமையாக வழங்கப்பட்டது. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாகவும், முழுமையாகவும் செயல்படும் விதத்தில் அரசின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. 

சிறுபான்மை மக்களின் நலம் கருதி, சிறுபான்மையர் ஆணையம் அமைப்பு ரீதியாக விரிவுபடுத்தப்பட்டு, உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து அரசாணை பிறப்பித்து, அதன்மூலம் ஆணையத்தின் செயல்பாடு பயனுள்ளதாக அமையுமாறு மேம்படுத்தப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் தான் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் போல் நாமும் வாழ வேண்டும். ஏழைகள் இல்லை என்ற நிலையை கொண்டு வருவது தான் அதிமுகவின் நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- மக்களுக்காக போராட்டம் நடத்துவது போல் நாடகமாடிய திமுக.!ஆட்சிக்கு வந்ததும் மக்களின் குரல்வளையை நெரிப்பதா.?சீமான்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி