சட்டத்திற்கு புறம்பாக தீச்சதர் தரப்பு செயல்பட்டால் அரசுக்கு உண்டான அதிகாரத்தை நிச்சயம் அறநிலைத்துறை செயல்படுத்தும். அறநிலையத் துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மழை தீவிரம் அடைய வாய்ப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , பொதுமக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மேயர் பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, எதிர்வரும் நாட்களில் தீவிரமடைய உள்ள பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் போரூர் ஏரி நிரம்பிய காரணத்தால் ஆலந்தூர் மண்டலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தண்ணீர் தேங்கி நின்றது , இனி வரும் நாட்களில் வெள்ள நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தற்போதைய நிலையில் ஆலந்தூர், திருவிக நகர் மண்டலம் மட்டுமே வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சவாலாக உள்ளது என்றார்.
கோயிலில் திருமணம் நடத்த தடையா..?
இதனை தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் கொரனோவுக்கு பின்னர் திருமணம் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரு சில கோயில்களில் திருப்பணிகள் காரணமாக திருமணம் நடத்த அனுமதி மறுத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் உரிய முறையில் தொடர்ந்து திருமணம் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் இது தொடர்பாக இணை ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்றார்.
கோயிலை கைப்பற்றும் எண்ணம் இல்லை
சிதம்பரம் நடராஜர் கோயில் யார் பெயரில் பட்டா உள்ளது என்பது குறித்து விவரங்கள் சமர்ப்பிக்கும் அவகாசம் நேற்றோடு நிறைவடைந்துள்ள நிலையில், தீட்சிதர் தரப்பில் அளிக்கும் பதிலை பொறுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சிதம்பரம் கோவிலை அரசு கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எந்த ஒரு செயலிலும் இந்து அறநிலையத்துறை ஈடுபடவில்லை என கூறிய அவர், அறநிலையத்துறையின் அதிகாரத்துக்குட்பட்ட திருக்கோயில் என்பதால் நிர்வாகம் அங்கு நடைபெறக்கூடிய நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றார். சட்டத்திற்கு புறம்பாக தீச்சதர் தரப்பு செயல்பட்டால் அரசுக்கு உண்டான அதிகாரத்தை நிச்சயம் அறநிலைத்துறை செயல்படுத்தும். அறநிலையத் துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு – திருமாவளவன் சூளுரை