அறநிலையத்துறை பள்ளி,கல்லூரியில் வெண்பொங்கல், இட்லியோடு காலை சிற்றுண்டி.! திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Nov 16, 2022, 9:48 AM IST

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4,000 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.


காலை சிற்றுண்டி திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து  இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,  இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக 250 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ரூ.1000 போதாது..! மழையால் பாதித்த அனைவருக்கும் ரூ.5000 வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்திய மார்க்சிஸ்ட்

அறநிலையத்துறை பள்ளிகள், கல்லூரிகள்

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள்

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி... ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!!

4000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

மேலும் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர். அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல்

இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலைச் சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிந்து செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதையும் படியுங்கள்

ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது.. திராவிட மாடல் அரசை எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம்.!

click me!