கையில் ஆவணமும் இல்லை.. மண்டையில் மூளையும் இல்லை.. அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி.!

By vinoth kumarFirst Published Aug 3, 2022, 6:38 AM IST
Highlights

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அமலாக்கத்துறை வேறு விஷயத்தில் பிஸியாக உள்ளது என அண்ணாமலை கூறியதற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அமலாக்கத்துறை வேறு விஷயத்தில் பிஸியாக உள்ளது என அண்ணாமலை கூறியதற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அடிக்கடி ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக புகார் கூறி வருகிறார். குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை அடுக்கி வருகிறார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு சலைக்காமல் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி கைதுக்கு இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க... திமுகவை டரியல் ஆக்கிய அண்ணாமலை.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- மின்துறையில் ஊழல் நடைபெறுவதாக நாங்கள் சொன்ன புகாருக்கு, நீதிமன்றம் செல்லுமாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சியில் நீதி கிடைக்காது எனத் தவறு செய்துள்ளதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. திமுக அமைச்சர்கள் மீது ஆளுநர் அலுவலகத்தில் கொடுத்த புகார் விசாரணையில் இருக்கிறது. அமலாக்கத்துறை பிசியா இருக்கிறார்கள். அவங்க கொஞ்சம் ஃபிரியாகிவிட்டு இந்தப்பக்கம் வருவார்கள் என்றார்.

இதையும் படிங்க;- இனி ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணம் உயரப்போகுதாம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மின்வாரியம்.. அலறும் ராமதாஸ்.!

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி;- அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரானார்? உத்தரவு போடும் அளவிற்கு மத்திய நிதி அமைச்சராக இருக்கிறாரா?  24 ஆயிரம் வாக்குகளில் அவரை தேர்தலில் தோற்கடித்து வெளியூருக்குத் துரத்தி விட்டுவிட்டார்கள். ஊர் பக்கமே அவரைப் பார்க்க முடியவில்லை.

அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி வரும் அண்ணாமலையின் கையில் காகிதமும் இல்லை. மண்டையில் மூளையும் இல்லை. வேலை வெட்டி இல்லாமல் பேசி வருபவர்களுக்கு என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படிங்க;- கள்ளக் குறிச்சி மாணவி விஷயத்தில் விசாரணை முடிச்சிட்டோம்.. 2வது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வரட்டும்.. அண்ணாமலை.

click me!