பயமுறுத்தும் முறைகேடு வழக்கு.. எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை எடுக்கும் அதிரடி முடிவு !

By Raghupati RFirst Published Aug 2, 2022, 7:57 PM IST
Highlights

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையும் வேலுமணி தரப்புக்கு வழங்கப்பட்டது. அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதை எதிர்த்து எஸ்.பி வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். 

அதில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும், லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையின் அறிக்கையை வழங்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். அதன்படி, எனவே, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வேலுமணிக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

click me!