
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. அங்குக் கடந்த ஆண்டு இறுதி முதலே பொருளாதார நெருக்கடி ஏற்படத் தொடங்கிவிட்டது.அந்த நெருக்கடி மோசமடைந்தது. இயற்கை விவசாயம் தொடங்கி கொரோனா வரை அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அமைதியாக நடைபெற்று வந்த மக்கள் போராட்டம் ஒரு கட்டத்தில் கையை மீறிச் செல்லும் சூழல் உருவானது.
மேலும் செய்திகளுக்கு..“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அங்கு மக்கள் போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்தது. இதையடுத்து வேறு வழியின்றி மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே அங்கு புதிய பிரதமர் ஆனார். இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த ரணில் விக்கிரமசிங்கே எடுத்த முயற்சிகளுக்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. வெளிநாடுகள் இலங்கைக்கு உதவத் தயங்குவதாகக் கூறப்பட்டது.
இந்தியா மட்டுமே எரிபொருள் தொடங்கி பல்வேறு அத்தியாவசிய பொருட்களைக் கொடுத்து உதவி வந்தது. இதை ரணில் விக்கிரமசிங்கேவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார். அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட பொதுமக்களை அதைக் கைப்பற்றவும் செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !
இருப்பினும் அதற்கு முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ச தப்பிவிட்டார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து ஒன்று பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற சுப்பிரமணியன் சுவாமி தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். 'இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று மத்திய நிதி மந்திரி கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகின்றன.
அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள நிலையில், அதனை ஒப்பிட்டே சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறினார் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !