இளையராஜா ஒரு ஜீரோ... சூடு சொரணையே இல்ல... ஜான் பாண்டியன்

Published : Aug 02, 2022, 07:18 PM IST
இளையராஜா ஒரு ஜீரோ... சூடு சொரணையே இல்ல... ஜான் பாண்டியன்

சுருக்கம்

இளையராஜா அரசியலில் சுத்த ஜீரோ என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் விமர்சித்துள்ளார். ஒழுங்காக வருமான வரி கட்டாத அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது

இளையராஜா அரசியலில் சுத்த ஜீரோ என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் விமர்சித்துள்ளார். ஒழுங்காக வருமான வரி கட்டாத அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், தலித் என்று சொன்னாலும் சூடு சொரணை இல்லாமல் இருக்கிறார் என்றும், ஜான்பாண்டியன் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் இசையமைப்பாளர் இளையராஜாவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் இளையராஜா ஏதோ ஒன்றை எதிர்நோக்கி இப்படிப் பேசி வருகிறார் என்றும் அப்போது விமர்சித்தனர்.

அதே நேரத்தில் இளையராஜா வருமான வரி கட்டவில்லை என்றும் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அப்போது வருமானவரித் துறையின் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்த நோட்டீசுக்கு அவர் ஆஜராகவில்லை என்றும் அப்போது தகவல் வெளியானது. இந்நிலையில்தான் திடீரென இளையராஜாவுக்கு ராஜ சபா உறுப்பினர்  பதவியை பாஜக அறிவித்தது,

இது தொடர்பாக அவருக்கு பலரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில்,  இன்னும் சிலர் பாஜகவுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதால், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியதால் இளையராஜாவுக்கு பாஜக வழங்கியுள்ள சன்மானம்தான் இந்த ராஜ சபா உறுப்பினர் பதவி என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், இளையராஜாவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

இளையராஜா குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜான் பாண்டியன், இளையராஜா அரசியலின் சுத்த ஜீரோ அவருக்கு எதற்கு எம்.பி பதவி, அவருக்கு அரசியலில் ஒன்றுமே தெரியாது, ஆனால் அவருக்கு எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு விசுவாசமாக பேசியதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அம்பேத்கருடன் எவரையுமே ஒப்பிட எவருக்குமே தகுதி இல்லை, ஆனால் இளையராஜா அம்பேத்கருடன் மோடியே ஒப்பிட்டுப் பேசியுள்ளது தவறு என தெரிவித்தார்.

அப்போது தலித் என்று யாராவது சொன்னால் அவர்களை வெட்டுவேன் என சொன்னது நீங்கள் தானே இப்போது இளைஞராஜாவை சிலர் தலித் என்கிறார்களே என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, இளையராஜாவுக்கு  சூடு சொரணை இல்லாமல் இருக்கிறார் நாம் என்ன செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு