தேதி குறித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு செல்லுமா ? பரபரப்பில் இபிஎஸ் Vs ஓபிஎஸ் !

By Raghupati RFirst Published Aug 2, 2022, 9:17 PM IST
Highlights

ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர் வழக்குகளை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து, பிரதான வழக்குகளை தள்ளி வைத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணையை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர். அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவற்றை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில் பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த  வழக்குகளின் விசாரணையை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வழக்குகளை நாளை மறுநாளான  ஆகஸ்ட் 4 அன்று விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

click me!