நமது இலக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 40க்கு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவையில் மாற்றுக் கட்சியினர் சுமார் 10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர்கள் முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவிலிருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தலைமையில் பலர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக, தேமுதிக, அமுமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த விழாவில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “நமது இலக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 40க்கு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒட்டு மொத்த இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார்” என்று பேசினார்.
இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?