மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய நபரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.
undefined
விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து விமான நிலைய வளாகத்திற்கு வெளியே வர பேருந்தில் ஏறி வருகை தந்தார். அப்போது விமான நிலைய ஓடுதள பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் மகன் ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்; காவல்துறை அதிரடி
அதில் "திடீரென எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம், அண்ணன் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன். என பேசியவர் தொடர்ந்து., எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம். (என்று ராஜேஷ் கூறியதும் கையை உயர்த்தி காமித்தார் எடப்பாடி பழனிசாமி.) "சின்னமாவிற்கு துரோகத்தை பண்ணியவர்., 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்" என கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் உடனடியாக அவரது செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார்.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பிய நபர் கைது pic.twitter.com/3YJBBQ8duC
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தொடர்ந்து., ராஜேஷை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் தனது சர்ச்சை பேச்சால் தற்போது அந்த இளைஞர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறையிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிமகன்கள் கவனத்திற்கு: மது போதையில் தகராறு செய்த தந்தையை குத்தி கொன்ற மகன் கைது
அவர் ஏதேனும் அரசியல் பின்பலத்தைச் சார்ந்தவரா அல்லது யாரேனும் தூண்டுதலின் பேரில் எடப்பாடி அருகே நின்று கொண்டு சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.