தமிழ்நாடு Vs குஜராத் - எது சிறந்த மாநிலம்? ட்விட்டரில் மத்திய அரசுக்கு அட்வைஸ் கொடுத்த பழனிவேல் தியாகராஜன்

By Raghupati RFirst Published Sep 3, 2022, 10:37 PM IST
Highlights

தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அப்போது கொடுத்திருந்த பேட்டி ஒன்று இலவச திட்டங்கள் தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சிப்பதாக பேசினார்.

கடந்த மாதம் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது என்றும், அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் பேசினார். மேலும் பேசிய அவர், ‘இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இந்த கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்கள், புதிய விரைவு சாலைகளை, புதிய விமான நிலையங்களை, பாதுகாப்பு பகுதிகளை கட்டமைக்க மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் தோற்கடிக்க வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

இந்த நிலையில், இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் எம்பி வாதிடிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்கவேண்டாம். நாங்கள் பேசாமல் இருப்பதால் நீங்கள் சொல்வதை எல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்று மட்டும் நினைக்காதீர்கள்’ என்று மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அப்போது கொடுத்திருந்த பேட்டி ஒன்று இலவச திட்டங்கள் தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சிப்பதாக பேசினார். இதனால் தான் நீதிபதி இப்படி பேசினார் என்றும் கூறப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பிடிஆருக்கும் சரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் சரி ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம் தான்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்நிலையில், இன்று ட்விட்டர் ஸ்பேஸ்ஸில் ‘திராவிட பொருளாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசையும் குறிப்பாக பிரதமர் மோடி முதல்வராக பதவி வகித்த குஜராத் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் ஒப்பிட்டு பேசினார். 

Live NOW ! https://t.co/2XI4pA3srS

— Dr. T R B Rajaa (@TRBRajaa)

அவர், ‘குஜராத் மாடலை விட திராவிட மாடலே சிறந்ததாக உள்ளது. காரணம், குஜராத்தில் 1000 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 டாக்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 80 சதவீத பெண்கள் உயர்கல்வி படிக்கின்றனர்.குஜராத்தில் 60 சதவீத பெண்கள் மட்டுமே உயர்கல்வி படிக்கின்றனர். தத்துவ அடிப்படையில் நிறைய பேர் பேசலாம்.

ஆனால் அதனை செயல்படுத்த வேண்டும்.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்தித்து பொறுப்புக்கு வந்தவர் இல்லை. சில நேரங்களில் இதனால் அவரது செயல்பாடுகள் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது. நிர்மலா சீதாராமன் மக்களை அவ்வப்போது மக்களை சந்தித்து பேச வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

click me!