அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாரதிய ஜனதா கட்சி மீது குறிப்பாக மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக பாஜகவினரும் அமைச்சர் பிடிஆரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும்போது, வீரமரணமடைந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அது போலியானது என சுசீந்திரன் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால் அந்த ஆடியோ உண்மையானது தான், அதில் நான் பேசியதை முழுவதுமாக வெளியிட வேண்டும் என்று கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பினார் அண்ணாமலை. இந்த விஷயம் மேலும் பிடிஆர் vs அண்ணாமலை மோதலுக்கு படிக்கட்டாக அமைந்தது.
மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !
இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறுவதாக கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார் என்ற தகவலே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது உண்மையா என்று ஆராய்ந்தோம். அந்த சர்ச்சைக்குரிய ட்வீட் ஆனது இப்போது பதிவிடப்படவில்லை. 2017ம் ஆண்டு பதிவிடப்பட்டது ஆகும். 'கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வால்அரியலூர் மாணவி அனிதா இறந்த அன்று இவ்வாறு ட்விட் செய்து இருந்தார்.
Today, for the first time since I left my professional career to enter public service 18 month ago, I wonder if I made the wrong choice 1/
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai)இந்த ட்விட்டை தொடர்ந்து நீட் தேர்வும், அதனுடன் தொடர்புடைய தகுதி தேர்வுகள் அனைத்து விதமான தேர்வுகளும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதாக இல்லை என்று அதில் பிடிஆர் தெரிவித்து இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குப் பயந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியல் வாழ்க்கையை விட்டு செல்வதாக கூறப்படும் செய்தி போலியானது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அடிக்கடி போலியான செய்திகள் பகிரப்படுவதால், எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க