இரட்டை இலை முடக்கம்; அதிமுக தொண்டர்கள் அய்யோ பாவம்..ஓபிஎஸ் Vs எடப்பாடியை அலறவிடும் முன்னாள் பிரமுகர் !

Published : Sep 03, 2022, 07:40 PM IST
இரட்டை இலை முடக்கம்; அதிமுக தொண்டர்கள் அய்யோ பாவம்..ஓபிஎஸ் Vs எடப்பாடியை அலறவிடும் முன்னாள் பிரமுகர் !

சுருக்கம்

உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மேல்முறையீடு அவருக்கு உண்மையிலேயே சாதகமாக அமையுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு  தீர்ப்பளித்தது.சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மேல்முறையீடு அவருக்கு உண்மையிலேயே சாதகமாக அமையுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில் இன்று  விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் எம்பியும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அவரது ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, 'எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த இருவருக்கும் அதிமுக கட்சியின் வளர்ச்சி பற்றி துளிகூட அக்கரை இல்லை. அதிமுக வழக்கில் நீதிமன்றம்  தீர்ப்பினால் இருவரும் மாறி மாறி மேல் முறையீடு மட்டுமே செய்து வருகின்றனர். 

இதனால் அதிமுக கட்சியின் சின்னமும், கொடியும் தேர்தல் ஆணையத்தால் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு தவறானது. இரு நீதிபதிகளின் தீர்ப்பிலும் முரண்பாடு உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இப்படி இருக்கும் போது,  இரண்டு பேரும் மாறி மாறி நீதிமன்றம் செல்வது கட்சிக்கு பாதிப்பு ஏற்படும். எடப்பாடி பழனிசாமி முதலைமைச்சர் பதவிக்கும், ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மட்டுமே உள்நோக்கம் கொண்டவர்கள். மத்திய பாஜக அரசு தமிழக அரசை வஞ்சிக்கிறது. அதைப்பற்றி எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ ஒருவருமே வாய் திறக்கவில்லை.

பன்னீர்செல்வமாக இருந்தாலும், சசிகலாவாக இருந்தாலும், சசிகலாவாக இருந்தாலும் யார் வேண்டுமானாலு தொண்டர்கள் செல்வாக்கைப் பெற்று பொதுச் செயலாளராக ஆகலாம். ஓபிஎஸ், இபிஎஸ் பிளவுபட்டதால் பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுக கட்சிக்கும் சாதகமாக அமைய சூழல் உருவாக்கியுள்ளது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்